பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2016

பாடசாலை செல்லாத மாணவர்கள் சிறுவர் இல்லங்களில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை செல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட 13 மாணவர்களில் ஐவர் சீர்திருத்த பள்ளி மற்றும் சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பாடசாலைக்கு செல்லாத நிலையில் வசித்து வந்த சிறுவர்கள் 13 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்களை நேற்றைய தினம் வரை சிறுவர் இல்லத்தில் தடுத்துவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய குறித்த 13 சிறுவர்களும் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த சிறுவர்களில் ஒருவரை அனுமதி பெற்ற சிறுவர் சீர்திருத்த பாடசாலையிலும், ஏனைய நால்வரை சிறுவர் இல்லத்திலும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு,


எஞ்சிய எட்டு பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களால் தவறான வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.