பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2016

நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரத போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாண புகையிரத கடவை காப்பாளர் சங்கங்களின் ஒன்றியத்தினால் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘நாங்கள் என்ன அடிமைகளா’ என கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகையிரத கடவை காப்பாளர்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாக்ஸிசலெனினிஸ கட்சியின் முக்கியஸ்தர் பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது