பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2016

தமிழக எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்... உஷார்படுத்தும் விஜயகுமார்!

த்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ் (ஓய்வு),
தமிழக கேடர் ஐ.பி.எஸ். ஆபீஸர்,  தமிழக போலீஸின் முக்கியப் பதவிகளில் இருந்தவர், சந்தனக்கடத்தல் வீரப்பனைக் கொன்ற சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை வகித்தவர், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவருடைய பாதுகாப்பு பிரிவு மற்றும் பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப்., ஆகிய துணை நிலை ராணுவப் பிரிவுகளில் தலைமைப் பதவியில் இருந்தவர். 

ரிட்டயர்டு ஆன பிறகு, மத்திய அரசு அவரை டெல்லிக்கு அழைத்து முக்கிய அசைன்மென்ட்டை தந்தது. இந்தியாவில் தலைதூக்கி வரும் மாவோயிஸ்ட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் அது! கடந்த காங்கிரஸ் ஆட்சி, தற்போதைய பி.ஜே.பி. அரசு... இரண்டிலும் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து வருகிறார்.

ஜூலை 5-ம் தேதியன்று சென்னை வந்திருந்த விஜயகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... 

த்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர்  பதவி எப்படி இருக்கிறது?

"ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான அசைன்மென்ட். எனக்கு நேரிடையாக இன்வால்வ்மென்ட் இருக்கிற விஷயங்களில் ஃபோகஸ் பண்ணிவருகிறேன். ட்ரைனிங், டாக்டீஸ், இன்டர் ஸ்டேட் ஒருங்கிணைப்பு, இன்டர் ஸ்டேட் ஆப்ரேஷன் ஆகியவற்றை கவனித்து வருகிறேன். குறிப்பாக, கிழக்கு இந்திய பிராந்தியமான மேற்கு வங்காளத்திற்கு கீழே, தமிழகத்திற்கு மேல... ஆந்திரா, தெலுங்கானா பகுதிகள் வரை உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசும் சரி. மாநில அரசுகளும் சரி...மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கைகளில் எனக்கு முழு ஒத்துழைப்பை தந்து வருகிறார்கள். முழு வேகத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகிறோம்."

தமிழக - கேரள எல்லையோர காட்டுப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சொல்கிறார்களே?


" பாலக்காடு பக்கத்தில் அகலி என்கிற பகுதி, மலப்புரம், கண்ணணூர் ஆகிய பகுதிகளில் சில குறிப்பிட்ட பாயிண்டுகளில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருக்கிறது. கேரளாவில் புது அரசு தற்போது வந்திருக்கிறது. இது தொடர்பாக, அம்மாநில முதல்வரை விரைவில் சந்தித்துப் பேச இருக்கிறேன். கோவைக்கு நான் சென்றிருந்தபோது, மேற்கு மண்டல ஐ.ஜி-யுடன் விரிவாக பேசியிருக்கிறேன். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை தந்து வருகின்றன. தமிழக வனப்பகுதிகளில் வனப்பாதுகாப்பு படையினர் நல்ல திறமையுடன் செயல்படுகிறார்கள். ஆனாலும், அந்த படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்." என்று சொல்லி முடித்தார்.