பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2016

ராம்குமாருக்கு மயக்கம் தெளிந்தது – இன்றிரவே சென்னை கொண்டு வரப்பட வாய்ப்பு!

மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு மயக்கம் தெளிந்ததையடுத்து, அவர் இன்றிரவே சென்னை கொண்டு
வரப்படலாம் என கூறப்படுகிறது.
சுவாதியை படுகொலை செய்த ராம்குமார், போலீசாரிடம் பிடிபட்டபோது பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ராம்குமாருக்கு  பாளையங்கோட்டை அரசு மருத்தவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவர் போலீசாரிடம் விரிவாக பேசும் அளவிற்கு உடல்நலன் தேற 2 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ராம்குமாருக்கு இன்று மாலை மயக்கம் தெளிந்ததாக மருத்தவமனை வட்டாரங்கள் கூறுகிறது.
இதையடுத்து அவர் இன்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சென்னையிலிருந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில்