பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2016

ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்படும் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கழுத்தில் வெட்டுப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட ராம்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இன்று விடுமுறை என்பதால் ராம்குமார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் இருந்ததால்,  நெல்லை முதலாவது நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், ராம்குமார் சிகிச்சை பெற்று வரும் மருத்துவனைக்கு வந்தார் .

ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் ராம்குமார். விசாரணைக்கு பின்னர், ராம் குமா ரை சென்னை அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார்.  சென்னை சைதாப்பேட்டை 14வது நீதிமன்றத்தில் ராம்குமாரை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து ராம்குமார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்படுகிறார்.  சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தகவல்.