பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2016

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை, அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில்
இருந்து விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர், பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
  
இந்தநிலையில், சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என, நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர். இதனையடுத்து அவரை விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை!