பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2016

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா  கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்ட பாடசாலை அதிபர் ஆனந்தன் தர்மசீலன் வயது 51 என்பவருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா. சசிமகேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற குற்றச் செயலுக்கு நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகளை அடுத்து 2014ஆம் ஆண்டு வவனியா மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்ட்டிருந்த வழக்கை அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு அப்பால் நீரூபிக்கப்பட்டமையால் எதிரியைக்குற்றவாளியாகக்கண்டு மேற்படி தீர்ப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.
தண்டப்பணமாக 5000ரூபாவும் நஷ்டஈடாக குறித்த சிறுமிக்கு 200000ரூபா வழங்குமாறும் வழங்கத்தவறினால் மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.