பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2016

ஒலிம்பிக் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும்
, நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தர வரிசையில் 20–வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்தித்தார். 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவரான செரீனா வில்லியம்ஸ் 4–6, 3–6 என்ற நேர்செட்டில் எலினா ஸ்விடோலினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். வெற்றி பெற்ற எலினா ஸ்விடோலினா கால் இறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வீனஸ்–செரீனா வில்லியம்ஸ் இணை வெளியேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் தோல்வி கண்டு நடையை கட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலக தர வரிசையில் 4–வது இடத்தில் இருப்பவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 1–6, 1–6 என்ற நேர்செட்டில் 34–ம் நிலை வீராங்கனையான மோனிகா புய்க்கிடம் (புயர்டோரிகோ) எதிர்பாராதவிதமாக தோல்வி கண்டு கண்ணீர் மல்க விடைபெற்றார்.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
111
பிரதி
Share
.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
111
பிரதி
Share