பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2016

இறுதிக்கட்ட யுத்தத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒரு தொகுதி சர்வதேச சமூகமும் சில நிறுவனங்களும் குற்றம் சுமத்துவதனைப் போன்று இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் கொல்லப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை என ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என ஒன்றியத்தின் செயலா ளரும் ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரை யாளருமான டொக்டர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிக ளினால் இந்தப் போலி புள்ளி விபரத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக இந்த குற்றச்சாட்டை மறுக்க ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.