பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2016

வடக்கில் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கிற்கான உத்தேச விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கும் அத ற்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைக்கு அமைவாக, விசேட பொருளாதார நிலையமொன்றை அமைப்பதற்குப் பதிலாக இரண்டு விசேட பொருளாதார நிலையங்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலும் வவுனியா மாவட்டத்தின் மதகுவைத்த குளம் பகுதியிலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், விசேட பொருளாதார நிலைய நிர்மாணத்திற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பொறுப்பு, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.