பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2016

கோப் குழுவின் செய்தி சேகரிக்க செப்ரெம்பர் முதல் அனுமதி

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழு கூட்டங்களின் செய்திகளைச் சேகரிக்க செப்டம்பர் மாதம் முதல் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான கோப் குழு கலந்துரையாடலுக்கு, ஊடகங்களை அனுமதிக்குமாறு ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார்.