பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2016

என்னுடன் வந்து பான் கீ மூனைச் சந்தியுங்கள்’ : சி.விக்கு சம்பந்தர் அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில்
, அந்த சந்திப்பில் தன்னையும் கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பிடமிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலார்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறும் போது, அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும், செல்வதாக முடிவு எடுக்கவில்லை என்றும் சந்திப்பது பற்றி சிந்திப்போம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின்போது, வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், நலன்புரி முகாம்களை சென்று பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.