பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2016

விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டாரா? ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்-சிவமோகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்
சமர்ப்பிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்களை கொன்றுகுவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போரடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தலைவராக இருக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மருத்துவர் சிவமோகன் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்துப் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணை நடாத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.