பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஸ்ரீ ரங்கா 2011ஆம் ஆண்டு தனிப்பட்ட தேவைக்காக பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியா செட்டிகுளப் பிரதேச வைத்தியசாலை மதிலில் வாகனத்தை மோதியதால், பிரமுகர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பலியானார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பானது தமக்குத் திருப்தியளிக்கவில்லையென பலியானவரின் குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய ரங்காவினை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸ் சட்டப்பிரிவு வடக்கிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.