பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2016

ரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டம்

வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வயோதிபர் ஒருவர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.

வவுனியா தெற்கு பிரதேச சபையின் ஓமந்தை உப அலுவலகத்திற்கு முன்னால் தா.மகேஸ்வரன் என்ற 73 வயதான வயோதிபர் இவ் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென கடந்த 2010ஆம் ஆண்டு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென சுட்டிக்காட்டிய குறித்த வயோதிபர், அதன் அடிப்படையில் ஓமந்தையிலேயே குறித்த மத்திய நிலையம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முதியவருக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள