பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2016

கருணாநிதி அவைக்கு வராதது ஏன்?: முதல் அமைச்சர் ஜெயலலிதா கேள்வி

சட்டசபையில் இன்று நடைபெற்ற காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு ஜெயலலிதா பதிலளித்து பேசினார். அப்போது அவர்  ஜெயலலிதா பேசியதாவது:

.தி.மு.க.,வினர் நடவடிக்கையை மக்கள்  கவனித்து வருகின்றனர். வேண்டுமென்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
ஆக்கப்பூர்வ விவாதம் செய்ய  சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க., உறுப்பினர்கள்  பங்கேற்றிருக்கலாமே? இன்று அவைக்கு வந்த தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?

கடந்த தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, நான் தனியாக வந்து சட்டசபையில் பேசினேன். அந்த துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வந்து பேசியிருக்க வேண்டும்? சஸ்பெண்ட் செய்யப்படாத இரண்டு அமைச்சர்கள் பேசியிருக்கலாமே? தி.மு.க., உறுப்பினர்கள் இன்று பங்கேற்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பது பற்றி விவாதிக்கப்படும். அதற்கு பதிலளிக்க முடியாது என்பதால் அவர்கள் பங்கேற்கவில்லை.பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்போது நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே அரசு, பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் கொலைச்சம்பவங்கள் குறைந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், குற்றப்புகார்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். போலீசாரி்ன் நடவடிக்கையால் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2 ஆளில்லா விமானங்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன” இவ்வாறு அவர் பேசினார்.