பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2016

சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்



சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் நல குறைவினால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 92.  சிங்கப்பூரின் 6வது அதிபராக கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார்.  கடந்த ஜூலையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 3 வார காலம் கோமா நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.