பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2016

னேடிய தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுதல் மற்றும் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் போன்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 51 ஆயிரம் கனேடிய தபால் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் 72 மணிநேர வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதிகள் விநியோகம் மற்றும் தபால் ஊழியர்களின் ஏனைய செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்படுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் குறித்த கால எல்லை முடிவடைவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் எவ்வாறான நடவடிக்கைகளை தாம் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிடவில்லை