பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்
அங்குவாழும் தமிழர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் வன்முறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளதால், வன்முறையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, ஹெக்கனஹள்ளி, ராஜகோபாலன்நகர் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.