பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு என இந்த வருடம் 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் வே.இரா
தாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாண சபைக்கென அரசினால் 4 ஆயிரத்து 131 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
வடக்கிலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு என ஆயிரத்து 402 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியாக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
ஆசிரியர் விடுதிகள், சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், மின்னிணைப்பு வசதிகள், ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இரண்டாம் தரப் பாடசாலைகளை மேம்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
இவை தவிர, மாகாண நிதிகளாக, மேல்மாகாணத்துக்கு 7 ஆயிரத்து 61 மில்லியன் ரூபாவும், மத்திய மாகாணத்துக்கு 6 ஆயிரத்து 605 மில்லியன் ரூபாவும், தென் மாகாணத்துக்கு 5 ஆயிரத்து 491 மில்லியன் ரூபாவும்,
கிழக்கு மாகாணத்துக்கு 5 ஆயிரத்து 459 மில்லியன் ரூபாவும், சப்ரகமுவ மாகாணத்துக்கு 4 ஆயிரத்து 795 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது என்றார்.