பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

பெல்லாரியில் தமிழக லாரிகளை அடித்து நொறுக்கிய கர்நாடகத்தினர்!

காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில்  தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து தண்ணீரை நிறுத்த வேண்டும் , தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும்,  இன்று கர்நாடகாவில் முழ அடைப்பு நடைபெற்று வருகிறது.  

இதற்கு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும்                     ஆதரவு தெரிவித்துள்ளது.  இன்று காலை  பேருந்துகள் முதல்  ஆட்டோ வரை இயங்கவில்லை.   குறீப்பாக மருந்துகள் கடை கூட திறக்கப்படவில்லை.  

 போராட்டக்காரர்கள் ஆங்காங்கே சாலையில் தடுப்புச்சுவர்கள் அமைத்து வாகனங்கள் எதுவ்ம் செல்லாதவாறு தடை போட்டுள்ளனர். மாண்டியா மாவட்டத்தின் பல இடங்களிலும் தடை போட்டுள்ளனர்.   தமிழக முதல்வர் ஜெயல்லைதாவின் உருவபொம்மையை வைத்து திதி கொடுக்கும் சம்பவமும் செய்தனர்.  பெல்லாரி மாவட்டத்தில் பைபாஸ் ரோட்டில் நின்றுகொண்டிருந்த தமிழத்தின் 7 லாரிகளின் கண்ணாடியை உடைத்தனர் போராட்டக்காரர்கள்.  இதனால் மைசூர், மாண்டியா, உட்பட பல்வேறு நகரங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.