பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2016

"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்'  பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் எழுக தமிழ் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எவ்வித அரசியல் சார்புமின்றி, தமிழ் மக்களின் நலனை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தது.
முற்றவெளியைச் சென்றடைந்த பேரணியின் ஆரம்பத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துடன் பேரணியின் இறுதிக்கூட்டம் ஆரம்பமாகியது.
 
இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்ப ங்கள்,உறவினர்கள், இராணுவம் கைப்பற்றி நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையா ளர்கள் உள்ளிட்டபலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்ப டையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்க ளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியின் மூலம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்படவி ல்லை என்பதை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்தப் பேரணியில் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்நதவர்கள், தொழிற்சங்கவாதிகள், யாழ் பல்கலைக்கழக சமூகம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகியவற்றுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.