பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2016

யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ

யாழ். பல்கலைக்கழகத்தின்  வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளா கத்தில்  தீ பரவல் ஏற்பட்டநிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக     தெரி விக்கப்படுகின்றது.

இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் பின்னர் வவுனியா நகரசபையினர் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.தீயணைப்பு படையினருடன் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ