பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

அதிபராக தேர்வானால் ஐ.எஸ். அமைப்பை ஒழிப்பேன்: ஹிலாரி கிளின்டன்




அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். அமைப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் நேருக்கு நேர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ ஒழிப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு இன்றியமையாதது. எனவே அதை நடத்தியே தீருவது என்பது எனது முதல் பணியாக இருக்கும். பில்லேடனை அழித்தது போல அல் பாக்தாதியையும் அழிப்போம். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவை அழித்துவிட்டோம். அமெரிக்காவுக்குள் நடக்கும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரேபிய நாடுகளிடம் இருந்து தேவையான உளவுத் தகவல்கள் பெறப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இணையத்தில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.