பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கை தம்பதி மீது அவுஸ்ரேலியாவில் வழக்கு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன்   நகரில்  இலங்கை தம்பதியினர் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடாத்தி வந்தமைக்கான வழக்கு இன்று அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

48 வயதான குமுதினி கண்ணன், 52 வயதான கந்தசாமி கண்ணன்  இருவருமே இந்த வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களாவர்..
ஜூலை 2007 தொடக்கம் ஜூலை 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தத் தம்பதியினர் ஒரு பெண்ணை அடிமைபோல வீட்டில் வைத்திருந்தார்கள் என்பதே இவர்கள் மீதான  குற்றச்சாட்டாகும்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆரோக்கிய நிலையில் முன்னேற்றமுண்டு என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மீண்டும் இந்த வழக்கு அடுத்த வருடம் மே மாதம் 8ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது .

அடிமைகளாக பணியாட்களை வைத்திருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந் நாட்டில் ஆகக் குறைந்தது 25 வருட சிறைத்தண்டனை கிடைக்கும்