பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.