பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2016

ஜனாதிபதி-ஐ.நா.செயலர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் இன்று (வியாழக்கி ழமை) இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை கொழும்பை வந்தடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து, இன்று காலை காலியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற பின்னர், கொழும்பு திரும்பி ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யும் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.