பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2016

முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் வெற்றி குறித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் சிம்லா முத்துச்சோழன், மக்கள் நலக்கூட்டணி சார்பில் வசந்தி தேவி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜெயலலிதா 97, 218 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சுயேச்சை வேட்பாளர் சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி புகாருக்கு எந்த வித முகாந்திரம் இல்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.