பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த எழுவர் கைது

வவுனியா பிரதேசவாசிகளை கிலிகொள்ளச் செய்துவந்த  கொள்ளைக்காரக் கும்பலின் ஏழு அங்கத்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இவர்களால் உபயோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல ஆயுதங்களையும், இவர்களால் கொள்ளை யடி க்கப்பட்டதாகக் கருதப்படும் தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.

வேப்பங்குளத்திலுள்ள பெரியகுளம் என்னுமிடத்தில் சந்தேக நபர்கள் கைதசெய்யப்பட்டுளளார்கள். ஏற்கனவே இந்த மாதம் 2ஆம் திகதி சி.ஐ.டி. பொலிஸார் பூந்தோட்டம், வவுனியாவில் ஒரு சந்தேகநபரை கைதுசெய்திருந்தார்கள். இவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பயனாகவே இக் கொள்ளைகள் சம்பந்தமாக புதிதாக அறுவரைக் கைது செய்ய முடிந்துள்ளது. 

இரு துப்பாக்கிகள், இரு கைக்குண்டுகள், 28 தங்க நாணயங்கள், பணமாக 140,000 , இரண்டு மோட்டார் பைக்குகள், இரண்டு கைபேசிகள் ஆகியவற்றுடன் வீடுடைக்க உதவும் மின்சாரக் கருவிகளையும் கைப்பற்றி இருக்கின்றார்கள்.

வவுனியா பூந்தோட்டம், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள்.