பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான்

உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் மாணவிகள் மீதான தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் இன்றைய தினம் மல்லாகம்
நீதிவானை சென்று சந்தித்த நிலையில் அந்த மாணவிகளை பாடசாலைக்கு செல்லுமாறு நீதவான் அறிவுறுத்தி அனுப்பினார்.

எனினும், குறித்த மாணவிகள் மீளவும் பாடசாலைக்கு வந்து பாடசாலை வளாகத்தினுள் செல்ல முயற்சித்த வேளை அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது வாயில் கதவை சாத்தியதால் அங்கு பெரும் களேபரம் இடம்பெற்றது.

இந்தநிலையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரிக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் நேரடியாக வருகை தந்து மாணவிகளை பாடசாலைக்கு அழைத்து சென்று கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றார்.பாடசாலைக்கு வெளியில் மாணவர்களின் பெற்றோர்பெருமளவில் உள்ளதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.