பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2016

புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு

ஜனாதிபதி பதவியை பெயரளவிலான அதிகாரமற்ற பதவியாக மாற்றி, பிரதமரை தெரிவு செய்ய மூன்று முறைகள் திய அரசியலமைப்புச் சட்ட வரைவின் மூலம் பரிந்துரைக்கப்ப ட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டவாக்க குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான சூரியரத்னம் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பத வியை பெயரளவிலான பதவியாக மாற்றுவது.

பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது. பொதுத் தேர்தலில் பிரதமருக்காக தனியான வாக்கை அளிப்பது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் பிரதமரை தெரிவு செய்வது ஆகிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த யோசனைகள் தொடர்பில் அரசியலமைப்புச் சட்டவாக்க குழு இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் அரசியல் கட்சிகள் இந்த யோசனைகள் குறித்து விவாதித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.