பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2016

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முன்னதாக   இன்று காலை நல்லூரின் வடக்குப்பக்கத்தில்  திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் நல்லூர் பின்வீதியில் உள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன் மற்றும் வடக்கு மாகாணசபை அவைத்தலைவா் சி.வி.கே.சிவஞானம் மாகாணசபை உறுப்பினர்களானபரஞ்சோதி,சுகிர்தன் மற்றும் தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி ,முன்னாள்போராளிகள் ,பொதுமக்களென பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.