பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

மூன்று வயது சிறுவன் பீரோவில் அடைத்து சித்திரவதை..!!காதல் படுத்தும் பாடு..!!

கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை
செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முரளி(30), சலவை தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 குழந்தைகள். முரளியின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் பிரபு. இவரது மனைவி பி.சுமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இந்நிலையில் முரளிக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் பி.சுமதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இப்பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனராம். முரளியின் நடவடிக்கையில் மனைவி சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிலநாட்களுக்கு முன் முரளியின் மனைவி சுமதி, ஊரில் உள்ள பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து செய்து கள்ளக்காதலி பி.சுமதியின் தொடர்பை அம்பலப்படுத்தினாராம்.
இதனால் கள்ளக்காதலி பி.சுமதி அவரை பழிவாங்க திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே சுமதியின் 2வது மகன் தினேஷ் (3) விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென அவன் மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி தம்பதியினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் நேற்று மாலை புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவனை தேடிவந்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலி பி.சுமதி வீட்டில் சந்தேகத்தின்பேரில் நேற்றிரவு போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பீரோவில் குழந்தை தினேஷ் கைகால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சிறுவனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் கள்ளக்காதலி பி.சுமதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஊர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதால் சுமதியை பழிவாங்குவதற்காக அவரது 2வது குழந்தையை கடத்திச்சென்று கட்டிப்போட்டு பீரோவில் அடைத்து வைத்து கொன்றேன் என்று கூறினாராம். கள்ளக்காதலை அம்பலப்படுத்தியதால் 3 வயது சிறுவனை கொடூரமான முறையில் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.