பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்ச தள இராஜகோபுர மகா கும்பாபிசேகம் [படங்கள் இணைப்பு]

ஈழவள  மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள்





பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும்  விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும்  நேற்று 08.09.2016 வியாழகிழமை காலை  இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் வாமதேவ சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .ந.பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலய கும்பாபிசேகத்தில்  வேலணை பிரதேசத்தை  சேர்ந்த உள்ளூர்  மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விநாயகபெருமானின் அடியவர்கள்   நூற்றுக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்!
ஆலயத்தின்  கும்பாபிசேகத்தை  முன்னிட்டு கண்டியிலிருந்து  வருகை தந்த 22  வயதுடைய  காஞ்சனா என்கிற பெண்யானை  கும்பாபிசேக கிரியை நிகழ்வுகள்  முழுவதிலும்  நான்கு  நாட்களும் பங்குபற்றியதுடன் வேலணை பிரதேத்தில் உள்ள ஆலயங்களிலும்  வழிபாட்டினை மேற்கொண்டது.
61
62
63
64
65
66