பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2016

சிரியையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிறையிலடைப்பு


திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் நாகஜோதி. அரசு பள்ளி ஆசிரியை. இவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்தார்.  அதில், நான் மதுரை மாவட்டம் டி. கள்ளிப்பட்டியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் காளீஸ்வரன். அவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் எனக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. குடும்பத்தை விட்டு பிரிந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து திருப்பூருக்கு இடம்மாறி வந்தோம். இங்கு வந்த நாங்கள் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். காளீஸ்வரன் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நான் வேறு பள்ளியில் வேலை செய்து வருகிறேன்.

இந்நிலையில் ஆசிரியர் காளீஸ்வரனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அது குறித்து நான் கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது காளீஸ்வரனுக்கு இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான் இது குறித்து காளீஸ்வரனிடம் தட்டிக்கேட்டேன்.

என்னை எதுவும் கேட்க கூடாது என்றும் நாம் உல்லாசமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளேன். ஏதாவது மிரட்டினால் என்றால் இணைய தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என்று படத்தை காண்பித்து என்னை மிரட்டுகிறார்.  எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி ஆசிரியர் காளீஸ்வரனை கைது செய்தார்.  இதைத்தொடர்ந்து ஆசிரியர் காளீஸ்வரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.