பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2016

நளினியை சந்திக்க மறுத்த முருகன்


முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட்டு உத்தரவுபடி முருகன் தனது மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார்.  அதன்படி முருகன், நளினியை இன்று சந்திக்க வேண்டும். ஆனால் நளினியை சந்தித்து பேச முருகன் விருப்பம் தெரிவிக்கவில்லை.

15 நாட்களுக்கு ஒருமுறை மனைவி நளினியை சந்திக்க வேண்டுமெனில் ஜெயில் அதிகாரிகளிடம் முருகன் விருப்ப மனு அளிப்பார்.  ஆனால் இந்த முறை நளினியை சந்திக்க அவர் மனு அளிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை