பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2016

காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்பட தயார்-அரசாங்கம் அறிவிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நல்லாட்சியை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அந்தவகையில் காணாமல் போனோர் குறித்த ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இச்செயற்பாடானது நல்லிணக்க செயற்பாட்டிலும், அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் ஒரு முக்கிய அம்சமாக அமையுமென நம்புவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும், அண்மையில் குறித்த செயலணி இலங்கைக்கு வந்திருந்தபோது முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்ந்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Like
Comment