பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2016

மருத்துவமனையில் ஜெயலலிதா... சம்பவங்களின் டைம்லைன் அப்டேட்ஸ்

வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த
ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே 9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.
நேற்று இரவு 9 மணி துவங்கி இன்று காலை 10:10 வரையிலான டைம்லைன் அப்டேட்டுகள் இதோ!