பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்: பிரபல நடிகர் பாராட்டு




மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டபோது ரயிலில் சிக்க இருந்த பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றினார். 

லோனாவாலா ரயில் நிலையத்தில் இருந்த ஒரு ரயில் புறப்பட்டபோது, ஒரு பெண்ணும் ஆணும் இறங்க முயன்றனர். ரயில் வேகம் அதிகரித்ததால் இருவரும நடைமேடையில் நிலைதடுமாறி விழுந்தனர். அந்தப் பெண் விழுந்ததும் ரயிலில் சிக்க இருந்த நிலையில், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர் பவாண் தாயிடே என்பவர் ஓடிச் சென்று அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றினார். 

ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதையடுத்து பிரபல நடிகர் அக்சய் குமார் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.