பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகா அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை மயிலாப்பூரில் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இதனால் தமிழகம் பரபரப்பாக காணப்படுகின்றது. 

இந்நிலையில் தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள கர்நாடகா வங்கி போலீஸ் பாதுகாப்புடன்  இயங்கி வருகிறது.