பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது




சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை போலீசார் கைது  செய்துள்ளனர். 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் 22 வயதான சாம்வேல். காரில் வலம் வந்து தன்னை செல்வந்தர்போல் காட்டிக்கொல்வார். பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி அவர்களுடன் தனிமையில் இருந்ததாகவும், அப்போது கேமராவை மறைத்து வைத்து ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நண்பர்களின் உதவியோடு சம்மந்தப்பட்ட பெண்களிடம் ஆபாச படத்தை காட்டி பணம் பறித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சாம்வேல் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து சாம்வேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.