பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2016

திலகவதியார் மகளிர் இல்ல மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு


மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா,
என்ற மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா, உ.சாந்தி ஆகிய இருமாணவிகளும் மாத்தறையில் கடந்த வாரம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பங்கு பற்றும் தேசிய மட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றி 2 ஆம் இடத்தினை பெற்று வெள்ளிப் பதங்கம் வென்றதுடன் சான்றிழிதழையும் பெற்று திலகவதியார் மகளிர் இல்லத்திற்கும் அவர்கள் கல்வி பயின்ற மட்−பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார்கள் என திலகவதியார் மகளிர் இல்லத்தை வழிநாடாத்திவரும்; சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் திருமதி.சிவசுந்தரி பிரபாகரன் தெரிவித்தார்
இந்நிலையில் ர.சந்திரகலா என்ற மாணவி கபடி விளையாட்டுப் போட்டியில் தலைவியாகவும் இருந்து செயற்பட்டுவருவதுடன், தேசிய கபடி குழுவிலும் தனது பெயரினை பதிவு செய்துள்ளதாக திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியலய அதிபர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார்.