பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2016

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம் :அதிபர் கைது

நான்கு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 52 வயதான அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 10 மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியர் எனத் தெரியவந்துள்ளது. 

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடசாலையிலுள்ள பல்வேறு இடங்களில் வைத்து தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, சம்பந்தப்பட்ட மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் பொலிஸாரிடம் சென்று இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். 

இதேவேளை, சந்தேகநபர் முன்னதாக உறவுக்கார சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.