பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2016

ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சத்யநாராயணா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். 

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நளினி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.