பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2016

யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா

முதற் தடவையாக   42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் செப்டெம்பர் 30 தொடக்கம்  ஒக்டோபர் 2ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளன.

நான்குநாள் இடம்பெறும் இந்த விழா செப்டெம்பர்30 அன்று சபாநாயகர் கருஜயசூரியவின்  தலைமையில் பி.ப.3 மணியளவில் ஆரம்பமாவுள்ளது.

பிரதமர் இக் காலகட்டத்தில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதால் அவர் பங்கேற்ற மாட்டார்.

மேலதிகமாக இணைக்கப்பட்ட புதிய எட்டு விளையாட்டு நிகழ்வுகளுடன் மொத்தமாக  33 நிகழ்வுகள்  இடம்பெறும்.
1967இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு விழா முதற் தடவையாக யாழ்மண்ணில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.