போலிக் கையெழுத்து - நம்பவேண்டாம்: பிரதமர் மோடி விளக்கம்
தமது கையெழுத்தைப்போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சமூக வலைதளங்களில் மக்களுக்கு தான் கோரிக்கை விடுப்பது போன்ற தகவல்களை தனது கையெழுத்துப் போன்று கையெழுத்திட்டு பரவவிடுவதாக கூறியுள்ளார். அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.