பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2016

ஆளுநருடன் அமைச்சர்கள் 
அரைமணி நேரம் ஆலோசனை!


முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 16 நாட்களாக அப்பல்லோ மருத்துவ னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் குறித்த ஆலோசனைக்காக சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சந்தித்தனர்.  தலைமைச்செயலாளர் ராம மோகனராவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். இந்த ஆலோசனை அரைமணி நேரம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர்கள் ஆளூநர் மாளிகையை விட்டு புறப்பட்டனர். பின்னர் தலைமைச்செயலாளரும் புறப்பட்டார்.