பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2016

வடக்கு – கிழக்கு தமிழர்கள் குறித்து சம்பந்தரிடம் கேட்டறிந்த சுவிஸ் சபாநாயகர்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறித்து எதிர்க்கட்சி
த் தலைவர் இரா.சம்பந்தரிடம் சுவிசர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர் கேட்டறிந்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தரை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாகவும், இதன்போது புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தல், சுவிஸ்ர்லாந்தில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு, மற்றும் இலங்கையின் புதிய அரசியல் சாசனத் தயாரிப்பு பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலமைகள் குறித்து சுவிஸர்லாந்து சபாநாயகர் கேட்டறிந்து கொண்டதுடன், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளார்.
சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ள அந்நாட்டு அரசு அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.