பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2016

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் யாழ்.மாவட்ட இணைப்பாளர் ந.இன்பம் தலைமையில், நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடி யேற்றத்தினை வலியுறுத்தியும், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் குறித்தும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அண்மைக்காலமாக முன்னெடுத்து வந்திருந்த ஆய்வு அறிக்கையே இதுவாகும்.

இதேவேளை, குறித்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், மலையக மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் யாழ்.மத்திய பேரூந்து தரிப்பிடத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க த்தினர் தெரிவித்துள்ளனர்.வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு