பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2016

வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாண  அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும், வடமாகாண நிதி மற்றும் திட்ட மிடல், சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார பதில் அமைச்சராக தம்பிராஜா குருகுலராசாவும், காணி மற்றும் வீதி அபிவிருத்தி,  வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவி ருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழ ங்கல் மற்றும் விநியோக பதில் அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசனும் சத்தியப்பிர மாணம் செய்து கொண்டுள்ளனர்.